சில்லி சிக்கன்

சில்லி சிக்கன்

என்னென்ன தேவை?

  • சிக்கன் - 1/4 கிலோ,
  • குடைமிளகாய் - 1,
  • பச்சைமிளகாய் - 2,
  • பூண்டு - 2 பல்,
  • சின்ன வெங்காயம் - 10,
  • சோயா சாஸ், சில்லி சாஸ், தக்காளி சாஸ் வகைகள் - தலா 1 டீஸ்பூன்,
  • வெண்ணெய் - 2 டீஸ்பூன்,
  • உப்பு - தேவைக்கு,
  • வெங்காயத்தாள் - சிறிது.
எப்படிச் செய்வது?

சிக்கனை வேகவைத்துக் கொள்ளவும். காய்கறிகளை நறுக்கிக் கொள்ளவும். கடாயில் வெண்ணெய் விட்டு நறுக்கிய பூண்டை சேர்த்து வதக்கி குடைமிளகாய், சின்ன வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
 
 பின்பு அனைத்து சாஸ் வகைகள், சிக்கன் துண்டுகள், உப்பு சேர்த்து கிளறி வெங்காயத்தாள் தூவி இறக்கவும்.

Comments

Popular posts from this blog

திருக்கழுக்குன்றப் பதிகம்

திருப்பொன் சுண்ணம்

திருச் சதகம்