ப்ரான் பாஸ்தா

ப்ரான் பாஸ்தா


என்னென்ன தேவை?

  • பென்னே பாஸ்தா - ஒரு கப்
  • இறால் - கால் கப்
  • வெங்காயம் - 2
  • தக்காளி - 4 - 5
  • குடைமிளகாய் - ஒன்று
  • சுக்கினி - ஒன்று
  • பூண்டு - 4 பற்கள்
  • பச்சை மிளகாய் - 2
  • சில்லி ஃப்ளேக்ஸ் - கால் தேக்கரண்டி
  • உப்பு - தேவையான அளவு
  • எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி

 
எப்படிச் செய்வது?
தேவையான பொருட்களைத் தயாராக எடுத்துக் கொள்ளவும். இறாலைச் சுத்தம் செய்து வைக்கவும்.
பூண்டு மற்றும் வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தக்காளியின் பின் பகுதியில் குறுக்கும், நெடுக்குமாக கத்தியால் கீறி வெந்நீரில் 5 நிமிடங்கள் போட்டு வைத்தால் தோல் உரிந்துவிடும். பிறகு தக்காளியை கூழாக அரைத்துக் கொள்ளவும்.
பாஸ்தாவை வேக வைத்து தண்ணீரை வடித்து வைத்துக் கொள்ளவும்.
பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி பூண்டு போட்டுத் தாளித்து, வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும்.
அத்துடன் தக்காளி விழுதைச் சேர்த்து நன்கு வதக்கவும்.
வதங்கியதும் நறுக்கிய குடைமிளகாய் மற்றும் சுக்கினி, இரண்டாகக் கீறிய பச்சை மிளகாய் சேர்த்து மூடி போட்டு 3 நிமிடங்கள் வேகவிடவும்.
பிறகு இறாலைச் சேர்த்து சில்லி ஃப்ளேக்ஸ் தூவி 2 நிமிடங்கள் கலந்துவிடவும்.
கடைசியாக வேக வைத்த பாஸ்தாவைச் சேர்த்து நன்கு ஒன்று சேரக் கிளறி இறக்கவும்.
சுவையான ப்ரான் பாஸ்தா தயார்.
இதே முறையில் இறாலுக்குப் பதிலாக எலும்பு நீக்கிய சிக்கன் சேர்த்தும் செய்யலாம்.
சைவப் பிரியர்கள் காய்கறிகளுடன் மஷ்ரூம் சேர்த்துச் செய்யலாம்.

Comments

Popular posts from this blog

திருக்கழுக்குன்றப் பதிகம்

திருப்பொன் சுண்ணம்

திருச் சதகம்