கோல்டன் ஃப்ரைடு பிரான் ஃபிங்கர்
கோல்டன் ஃப்ரைடு பிரான் ஃபிங்கர்
என்னென்ன தேவை?
- இறால் - 25 கிராம்,
- இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்,
- வெள்ளை மிளகுத்தூள் - 2 கிராம்,
- உப்பு - 3 கிராம்,
- வினிகர் - 1 டேபிள்ஸ்பூன்,
- சோயா சாஸ் - 1 டேபிள்ஸ்பூன்,
- பிரெட் கிரம்ஸ் - 100 கிராம்,
- மைதா - 100 கிராம்,
- முட்டை - 1,
- பால் அல்லது தண்ணீர் - 1 டேபிள் ஸ்பூன்,
- பொரிக்க எண்ணெய் - தேவைக்கு.
எப்படிச் செய்வது?
இறாலை சுத்தம் செய்து டிஸ்யூ பேப்பரில் பரப்பி வைக்கவும். பாத்திரத்தில் இஞ்சி பூண்டு விழுது, வெள்ளை மிளகுத்தூள், உப்பு, வினிகர், சோயா சாஸ் சேர்த்து இறாலை கலந்து வைக்கவும்.
முட்டையை பால் அல்லது தண்ணீரில் நன்கு அடித்து கொள்ளவும். முதலில் இறாலை மைதா மாவில் பிரட்டி, முட்டைக் கலவையில் முக்கி எடுத்து, பிரெட் கிரம்ஸில் பிரட்டி, 30 நிமிடம் ஃப்ரிட்ஜில் வைக்கவும். கடாயில் எண்ணெயை காயவைத்து இறாலை பொன்னிறமாக பொரித்தெடுத்து பரிமாறவும்.
Comments
Post a Comment