இறால் மிளகு வறுவல்

இறால் மிளகு வறுவல்

தேவையானவை

  • இறால் மீன் 1/4 கிலோ
  • பச்சை மிளகாய் 5
  • இஞ்சி 25 கிராம்
  • பூண்டு 20 பற்கள்
  • பல்லாரி 1
  • மிளகாய்த்தூள் 1 ஸ்பூன்
  • மிளகுத்தூள் 1 ஸ்பூன்
  • மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன்
செய்முறை

கழுவிய இறால் மீனுடன் மஞ்சள் தூள், மிளகுத்தூள், மிளகாய்த்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து ஊற வைக்கவும். பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டை விழுதுபோல அரைத்து தனியாக வைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பொடியாக நறுக்கிய பல்லாரி, கறிவேப்பிலையை போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
 
    பின்னர் இஞ்சி, பூண்டு விழுதை சேர்த்து பச்சை மணம் மாறும் வகையில் நன்றாக வதக்கவும். இப்ப இறால் கலவையை வாணலியில் போட்டு நன்றாக பிரட்டவும். இதமான பதத்தில் இறால் வெந்ததும், அடுப்பை ஆஃப் செய்யவும்... அவ்வளவுதான்.. சுவையான இறால் மிளகு வறுவல் உங்கள் முன்னே...! இட்லி, தோசை, சாதம் உள்ளிட்டவைகளுடன் தொட்டு, பிரட்டி சாப்பிடலாம். டேஸ்ட் தெறிக்கும்...!

Comments

Popular posts from this blog

திருக்கழுக்குன்றப் பதிகம்

திருப்பொன் சுண்ணம்

திருச் சதகம்