சிக்கன் மசாலா

சிக்கன் மசாலா
தேவையான பொருட்கள்:

  • கோழிக்கறி - 1 கிலோ
  • பெரிய வெங்காயம் -கால் கிலோ
  •  தக்காளி - 4
  •  இஞ்சி சிறுதுண்டு
  •  பூண்டு - 15 பல்
  • கொத்தமல்லித் தழை சிறிதளவு
  • எண்ணெய் அரை கப்
  • மல்லி தூள்  - 2 ஸ்பூன்
  • மிளகாய் தூள்  - 2 ஸ்பூன்
  • சிக்கன் மசாலா  -2ஸ்பூன்
  •  மிளகு  தூள்     - 1 ஸ்பூன்
  • மஞ்சள்தூள்    - கால் ஸ்பூன்

தாளிக்க
  •   ஏலக்காய் - 3
  •  சோம்பு   - சிறிதளவு
  • பட்டை - சிறு துண்டு
  •   உப்பு தேவையான அளவு


செய்முறை:

கோழியை நன்கு சுத்தம் செய்து பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். வெங்காயம், தக்காளியைக் கழுவி நறுக்கிக்

கொள்ள வேண்டும். இஞ்சி பூண்டினைத் தோலுரித்துப் அரைக்க வேண்டும் .

ஒரு கடாயி்ல்
எண்ணெய் விட்டு காய்ந்ததும் , கிராம்பு, பட்டை, , சோம்பு போட்டு தாளித்து  நறுக்கின வெங்காயத்தை அதில் போட்டு வதக்க வேண்டும்.  அதனுடன் அரைத்த  இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்


.நன்கு வதங்கியவுடன்  மசாலா தூள் அனைத்தையும்  போட்டு வதக்கி நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கி அதனுடன் சிக்கன் உப்பு சேர்த்து நன்கு கிளரி  3 டம்ளர் தண்ணீர் விட்டுமிதமான தீயில் நன்கு வேகவிட வேண்டும். கோழி நன்கு வெந்து மிருதுவானவுடன் இறக்கி, மல்லித்  தழை தூவிப் பரிமாற வேண்டும்.

Comments

Popular posts from this blog

திருக்கழுக்குன்றப் பதிகம்

திருப்பொன் சுண்ணம்

திருச் சதகம்