நண்டு கிரேவி

நண்டு கிரேவி

தேவையானவை

  • நண்டு 5
  • தக்காளி 3 (பொடியாக நறுக்கியது)
  • சீரகம் 1 ஸ்பூன்
  • சோம்பு 1 ஸ்பூன்
  • பூண்டு 10 பல்
  • இஞ்சி சிறிதளவு
  • பல்லாரி 2 (பொடியாக நறுக்கியது)
  • மிளகு 1 ஸ்பூன்
  • காய்ந்த மிளகாய் 5
  • மஞ்சள் தூள் சிறிதளவு
செய்முறை

முதலில் காய்ந்த மிளகாய், சீரகம், மிளகு, பெருஞ்சீரகம், இஞ்சி, பூண்டு ஆகியவற்றை நன்கு அரைத்து கொள்ள வேண்டும். வாணலியில் 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு கறிவேப்பிலை, வெங்காயம் பின்னர் தக்காளி, மஞ்சள் தூள் போட்டு வதக்கவும். இப்போது அரைத்த மிளகு - மிளகாய் கலவையை நன்றாக வதக்கி அரை டம்ளர் தண்ணீர் விட்டு கலக்கவும்.
 
 இப்ப நண்டை கலவையில் போட்டு, நன்கு கொதி வரும் வரை காத்திருக்கவும். வந்தவுடன் உப்பு போட்டு, அடுப்பை மிதமாக எரிய விட்டு கிரேவி பக்குவம் வரை வரை கிண்டவும். வழக்கம்போல இறக்கும்போது மல்லிைய தூவினால், நல்ல கமகம மணத்துடன் நண்டு கிரேவி ரெடி.

Comments

Popular posts from this blog

திருக்கழுக்குன்றப் பதிகம்

திருப்பொன் சுண்ணம்

திருச் சதகம்