மஸ்டர்ட் இறால் மசாலா
மஸ்டர்ட் இறால் மசாலா
என்னென்ன தேவை?
- மிளகாய்த்தூள்- 1 டேபிள் ஸ்பூன்,
- மஞ்சள் தூள் - 2 டேபிள்ஸ்பூன்,
- கருஞ்சீரகம் - சிறிது,
- உப்பு - தேவைக்கு,
- சர்க்கரை - 1 டீஸ்பூன்,
- தேங்காய் விழுது - 4 டேபிள்ஸ்பூன்,
- அரைத்த கடுகு விழுது - 4 டேபிள்ஸ்பூன்,
- தயிர் - 5 டேபிள்ஸ்பூன்,
- இறால் - 350 கிராம்,
- கடுகு எண்ணெய் - 6 டேபிள்ஸ்பூன்.
எப்படிச் செய்வது?
இறாலை நன்கு சுத்தம் செய்து உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து 30 நிமிடம் தனியே வைக்கவும். பிறகு தயிர், மிளகாய்த்தூள், சர்க்கரை, தேங்காய் விழுது, கடுகு விழுது சேர்த்து நன்கு கிளறவும். கடாயில் கடுகு எண்ணெயை ஊற்றி கருஞ் சீரகம் போட்டு தாளித்து, இறால் மசாலாவை சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி வேகவிடவும். வெந்ததும் சாதத்துடன் பரிமாறவும்.
Comments
Post a Comment