சிக்கன் வடை

சிக்கன் வடை

தேவைாயன பொருள்கள் . 


  • சிக்கன் - கால் கிலோ
  • முட்டை - 1
  • பச்சை மிளகாய் - 2
  • நறுக்கிய பெரிய வெங்காயம் - 4
  • இஞ்சி - பூண்டு பேஸ்ட் - 3 ஸ்பூன்
  • தேங்காய் துருவல் - 1 மூடி
  • மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
  • மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்
  • கறி மசாலா - 1 ஸ்பூன்
  • நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு
  • எண்ணெய் - தேவைாயன அளவு
  • உப்பு - தேவைாயன அளவு

செய்முறை. 

சிக்கனை எலும்பில்லாமல் சுத்தம் செய்து சின்ன துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். 
மிக்ஸியில் சுத்தம் செய்த சிக்கன் துண்டுகளை போட்டு தண்ணீர் சேர்க்காமல் நன்கு நைசாக விழுதாக போல் அரைத்து கொள்ளவும்.
தேங்காயை மிக்ஸியில் போட்டு தண்ணீர் சேர்த்து அரைத்து விழுதாக கொள்ளவும். 
ஒரு பாத்திரத்தில் அரைத்த சிக்கன் விழுதை போட்டு அதனுடன் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயத்தை சேர்த்து அதில் முட்டையை உடைத்து ஊற்றவும். 
பிறகு அதனுடன் இஞ்சி பூண்டு விழுது, கறி மசாலா, மஞ்சள் தூள் , மிளகாய் தூள், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் உப்பு ஆகியவற்றை போடவும். 
அதன் பின்னர் இவற்றுடன் நறுக்கின கொத்தமல்லி, கறிவேப்பிலை மற்றும் தேங்காய் விழுதையும் சேர்க்கவும். 
அரைத்த சிக்கன் விழுதுடன் எல்லாவற்றையும் சேர்த்த பிறகு ஒன்றாக கலந்து வடை மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும். 
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கலந்து வைத்திருக்கும் மாவை சிறிய எலுமிச்சை அளவு எடுத்து வடை போல தட்டி எண்ணெயில் போட்டு வேக விடவும். 
அடுப்பை குறைத்து மிதமான தீயில் வைத்து வேகவைக்கவும். சற்று நிறம் மாறியதும் திருப்பி போட்டு நன்கு பொன்னிறமான ஆனதும் எடுத்து விடவும்.
சூடான சிக்கன் வடை தயார். .

Comments

Popular posts from this blog

திருக்கழுக்குன்றப் பதிகம்

திருப்பொன் சுண்ணம்

திருச் சதகம்