திருப்பொன் சுண்ணம் முத்து நல் தாமம், பூ மாலை, தூக்கி, முளைக்குடம், தூபம், நல் தீபம்,வைம்மின்! சத்தியும், சோமியும், பார் மகளும், நா மகளோடு பல்லாண்டு இசைமின்! சித்தியும், கௌரியும், பார்ப்பதியும், கங்கையும், வந்து, கவரி கொள்மின்! அத்தன், ஐயாறன், அம்மானைப் பாடி, ஆட, பொற்சுண்ணம் இடித்தும், நாமே! பூ இயல் வார் சடை எம்பிராற்கு, பொன் திருச் சுண்ணம் இடிக்கவேண்டும், மாவின் வடு வகிர் அன்ன கண்ணீர்! வம்மின்கள், வந்து, உடன் பாடுமின்கள்; கூவுமின், தொண்டர் புறம் நிலாமே; குனிமின், தொழுமின்; எம் கோன், எம் கூத்தன், தேவியும் தானும் வந்து, எம்மை ஆள, செம் பொன் செய் சுண்ணம் இடித்தும், நாமே! சுந்தர நீறு அணிந்து, மெழுகி, தூய பொன் சிந்தி, நிதி பரப்பி, இந்திரன் கற்பகம் நாட்டி, எங்கும் எழில் சுடர் வைத்து, கொடி எடுமின்; அந்தரர் கோன், அயன் தன் பெருமான், ஆழியான் நாதன், நல் வேலன் தாதை, எம் தரம் ஆள் உமையாள் கொழுநற்கு, ஏய்ந்த பொற்சுண்ணம் இடித்தும், நாமே! காசு அணிமின்கள், உலக்கை எல்லாம்; காம்பு அணிமின்கள், கறை உரலை; `நேசம் உடைய அடியவர்கள் நின்று நிலாவுக' என்று வாழ்த்தி, தேசம் எல்லாம் புகழ்ந்து ஆடும் கச்ச...
Comments
Post a Comment