Posts

Showing posts from February, 2018

patta chitta

Image

சிக்கன் சுக்கா

Image
சிக்கன் சுக்கா தேவையான பொருட்கள்: சிக்கன் –  அரை கிலோ , பெரிய வெங்காயம் – 2 இஞ்சி பூண்டு விழுது -2 டீஸ்பூன், கறிமாசால் தூள் – 1 ஸ்பூன், மஞ்சள் தூள் – அரைஸ்பூன், மிளகாய்த்தூள் - 1  ஸ்பூன், மிளகு                  - 2 ஸ்பூன் சீரகம்               -   2 ஸ்பூன் மல்லித்தூள் –  2  ஸ்பூன், எண்ணெய் – தேவையான அளவு உப்பு – தேவைக்கு, மல்லி இலை   - சிறிதளவு பட்டை , கிராம்பு   - சிறிதளவு செய்முறை : முதலில் கோழிக்கறியை சுத்தம் செய்து   சிறிய துண்டுகளாக  நறுக்கி கழுவி  கொள்ளவும். பின்பு மிளகு ,சீரகத்தை மிக்சியில் போட்டு நன்கு பொடித்து வைத்து கொள்ளவும். கடாயில்   எண்ணெய் ஊற்றி சூடாக்கிய‌ எண்ணெயில்   பட்டை , கிராம்பு    போட்டு தாளித்து  நறுக்கிய வெங்காயம்,சேர்த்து நன்றாக வதக்கவும். நன்ற...

செட்டிநாடு சிக்கன் குழம்பு

Image
செட்டிநாடு சிக்கன் குழம்பு தேவையான  பொருள்கள்   சிக்கன்  - ஒரு கிலோ வெங்காயம் - 2 தக்காளி - 4 மஞ்சள்பொடி - அரை ஸ்பூன் மிளகாய்ப்பொடி - 3  ஸ்பூன் மல்லிப்பொடி - 4 ஸ்பூன் அரைக்க மிளகு - ஒரு  ஸ்பூன் சீரகம் - ஒரு  ஸ்பூன் சோம்பு - ஒரு  ஸ்பூன் பூண்டு - 6 பல் இஞ்சி - ஒரு துண்டு வெங்காயம் - ஒன்று உப்பு - தேவையான அளவு தாளிக்க நல்லெண்ணெய் - 4  ஸ்பூன் பட்டை - 2 கிராம்பு - ஒன்று அன்னாசிப்பூ - 2 சோம்பு - அரை  ஸ்பூன் செய்முறை ஒரு கடாயில் மிளகு, சீரகம், சோம்பு மூன்றையும் வறுத்து பூண்டு, இஞ்சி, வெங்காயாம் சேர்த்து அரைத்து மஞ்சள் பொடி   சேர்த்து சிக்கனுடன் பிசறவும். கடாயில் நல்லெண்ணெய் விட்டு தாளிக்க வேண்ட...

பெப்பர் பட்டர் சிக்கன் மசாலா

Image
பெப்பர் பட்டர் சிக்கன் மசாலா|pepper butter chicken தேவையான பொருட்கள்: சிக்கன்   - அரை கிலோ மிளகு -  20 இஞ்சி  -  1 துண்டு பூண்டு   - 3 பல் மஞ்சள் தூள்   - அரை  ஸ்பூன் தணியா தூள்  - 1   ஸ்பூன் மிளகாய் தூள் - 1 ஸ்பூன் பெரிய  வெங்காயம்  -2 வெண்ணெய் - 100 கிராம் உப்பு   -தேவையான அளவு செய்முறை : மிளகைத் தூள் செய்து இஞ்சி  ,பூண்டு   மஞ்சள் தூள், தனியா தூள், மிளகாய் தூள் இவற்றுடன் கலந்து துவையல் போல் பிசைந்து கொள்ள வேண்டும். இந்த கலவையை  கழுவிய சிக்கனுடன் சிறிது உப்பு சேர்த்து  15 நிமிடம் ஊற வைக்கவும். வெங்காயத்தை பொடியாக  நறுக்கி வைத்து கொள்ளவும். பின்பு ஊற வைத...

சிக்கன் மசாலா

Image
சிக்கன் மசாலா தேவையான பொருட்கள்: கோழிக்கறி - 1 கிலோ பெரிய வெங்காயம் -கால் கிலோ  தக்காளி - 4  இஞ்சி சிறுதுண்டு  பூண்டு - 15 பல் கொத்தமல்லித் தழை சிறிதளவு எண்ணெய் அரை கப் மல்லி தூள்  - 2 ஸ்பூன் மிளகாய் தூள்  - 2 ஸ்பூன் சிக்கன் மசாலா  -2ஸ்பூன்  மிளகு  தூள்     - 1 ஸ்பூன் மஞ்சள்தூள்    - கால் ஸ்பூன் தாளிக்க   ஏலக்காய் - 3  சோம்பு   - சிறிதளவு பட்டை - சிறு துண்டு   உப்பு தேவையான அளவு செய்முறை : கோழியை நன்கு சுத்தம் செய்து பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். வெங்காயம், தக்காளியைக் கழுவி நறுக்கிக் கொள்ள வேண்டும். இஞ்சி பூண்டினைத் தோலுரித்துப் அரைக்க வேண்டும் . ஒரு கடாயி்ல் எண்ணெய் விட்டு காய்ந்ததும் , கிராம்பு, பட்டை, , சோம்பு போட்டு தாளித்து  நறுக்கின வெங்காயத்தை அதில் போட்டு வதக்க வேண்டும்.  அதனுடன் அரைத்த  இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும் .நன்கு வதங்கியவுடன்  மசாலா தூள் அனைத்தையும்  போ...

நாட்டுகோழி ரசம்

Image
நாட்டுகோழி ரசம்/nattu kozhi rasam தேவையான பொருட்கள் நாட்டு கோழி  - அரை கிலோ சின்ன வெங்காயம் – 15 சீரகம்  – 1  ஸ்பூன் மிளகு  – 2   ஸ்பூன் பச்சை மிளகாய் – 1 தக்காளி – 2 இஞ்சி    பூண்டு –  பேஸ்ட்  -2   ஸ்பூன் பட்டை, லவங்கம் – தலா 1 மிளகாய்த்தூள் – 1   ஸ்பூன் தனியாத்தூள் – 1   ஸ்பூன் மஞ்சள்தூள் –   அரை  ஸ்பூன் கருவேப்பிலை  , மல்லி இலை - தேவையான அளவு உப்பு, எண்ணெய் – தேவையான அளவு செய்முறை மிளகு , சீரகம்  இரண்டையும் மிக்சியில் போட்டு பொடித்து கொள்ளவும். குக்கரில்  எண்ணெய் ஊற்றி பட்டை, லவங்கம் சேர்த்து தாளித்து, இரண்டாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.  பின் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். பின் தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு  மசியுமாறு வதக்கிக் கொள்ளவும். அதனுடன் பொடித்த  மிளகு , சீரகம்    , மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள்தூள், உப்பு, கோழிக்கறி...

சிக்கன் மஞ்சூரியன்

Image
சிக்கன் மஞ்சூரியன் / chicken manchurian தேவையான பொருள்கள் எலும்பில்லாத சிக்கன் - அரை கிலோ பூண்டு -  அரை கப் பொடியாக நறுக்கியது பச்சை மிளகாய் - 2 பொடியாக நறுக்கியது குட மிளகாய் - 2 பெரிதாக நறுக்கியது வெங்காயம்   - 1   நறுக்கியது சோயா சாஸ்-  1 ஸ்பூன் தக்காளி சாஸ் - 2 ஸ்பூன் மிளகு தூள்  -  2 ஸ்பூன் கார்ன் பிளவர் மாவு - 2  ஸ்பூன் உப்பு- தேவையான அளவு எண்ணெய் -தேவையான அளவு வெங்காயத்தாள் - தேவையான அளவு ஊற வைக்க எலும்பில்லாத சிக்கன் இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1ஸ்பூன் எலுமிச்சை சாறு - 2 ஸ்பூன் மிளகாய் தூள் - 2   ஸ்பூன் 1  முட்டையின் வெள்ளை  கரு கார்ன் பிளவர் மாவு  -  2 ஸ்பூன் மைதா ம...

செட்டிநாடு சிக்கன் மிளகு வறுவல்

Image
செட்டிநாடு சிக்கன் மிளகு வறுவல் / chettinad chicken milagu varuval தேவையான பொருட்கள்: சிக்கன் - அரை கிலோ பெரிய வெங்காயம் - 2   தக்காளி - 2  இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 ஸ்பூன் மஞ்சள் தூள் - 1 ஸ்பூன் மிளகாய் தூள் - 1 ஸ்பூன் மல்லித் தூள் - 1  ஸ்பூன் மிளகுத் தூள் -2 ஸ்பூன் எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன் தாளிப்பதற்கு . பட்டை - சிறு துண்டு பிரியாணி இலை -1 சோம்பு - 1 டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிது செய்முறை : வெங்காயம் தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும்.  சிக்கனை நன்கு  கழுவி,  அத்துடன்   மிளகாய் தூள்,   மஞ்சள் தூள் மற்றும்  சிறிது இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து, சிறிது உப்பு  சேர்த்து  நன்கு  பிசைந்து   அரை மணி நேரம் அப்படியே வைக்க வேண்டும். பின்னர் கடாயை  அடுப்பில் வைத்து, அதில்   4   ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை   போட்டு   தாளித்து, பின் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும். பின்பு...

நாட்டுகோழி சுக்கா

Image
நாட்டுகோழி சுக்கா / Nattu Kozhi sukka தேவையான பொருட்கள் நாட்டு கோழி சிக்கன்   – அரை கிலோ சின்ன வெங்காயம் – 30 இஞ்சி பூண்டு விழுது – 1  ஸ்பூன் மல்லித்தூள் – 3 ஸ்பூன் மிளகாய்  தூள் – 1 ஸ்பூன் மிளகு  - 1 ஸ்பூன் சீரகம்   -  1 ஸ்பூன் கரம்மசாலா தூள்  - 1 ஸ்பூன் மஞ்சள்தூள் – அரை  ஸ்பூன் உப்பு  - தேவைாயன அளவு அரைக்க தேங்காய் துருவியது – 5 ஸ்பூன் கசகசா – 1 ஸ்பூன்  முந்திரிபருப்பு – 5 தாளிக்க நல்லெண்ணெய்  -  5  ஸ்பூன் பட்டை – 2 துண்டு கிராம்பு – 2 செய்முறை : சிக்கனை   எலும்பு  நீக்கி  சின்னதாக  வெட்டிக் கொள்ளவும். பின்பு மிளகு ,சீரகத்தை மிக்சியில் போட்டு நன்கு பொடித்து வைத்து கொள்ளவும் வெங்காயத்தை  பொடியாக நறுக்கி கொள்ளவும். அரைக்க கொடுத்தவற்றை பரபரப்பாக அரைத்து கொள்ளவும். கடாயில்   எண்ணெய் ஊற்றி சூடாக்கிய‌ எண்ணெயில்   பட்டை , கிராம்பு    போட்டு தாளித்து  நறுக்கிய வெங்காயம்,சேர்த்து நன்றாக வதக்கவும்...

கேரளா சிக்கன் வறுவல்

Image
கேரளா சிக்கன் வறுவல் | kerala chicken fry தேவையான பொருள்கள் சிக்கன் - அரை கிலோ சோம்பு  -  1  ஸ்பூன் காய்ந்த  மிளகாய் -  7 பூண்டு -  10 பல் கறிவேப்பிலை - சிறிதளவு உப்பு - தேவையான அளவு தேங்காய் எண்ணெய் - 5 ஸ்பூன் செய்முறை முதலில் சிக்கனை சிறிய துண்டுகளாக நறுக்கி  நன்கு கழுவி வைத்து கொள்ளவும் பின்பு  மிக்ஸியில்  காய்நத  மிளகாய், சோம்பு , பூண்டு, உப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும். கழுவி வைத்துள்ள சிக்கனுடன்   அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டை சேர்த்து பிரட்டி, 1 மணிநேரம்  ஊற வைக்க வேண்டும். பின்பு  கடாயை அடுப்பில் வைத்து,  தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் ஊற வைத்துள்ள சிக்கனை சேர்த்து   நன்கு  பிரட்டி   1 டம்ளர்   தண்ணீர்   ஊற்றி   நன்கு   வேக  வைக்கவும். தண்ணீர்   முற்றிலும்   வற்றி   சிக்கன்   நன்கு...

கோங்கூரா சிக்கன் கறி

Image
கோங்கூரா சிக்கன் கறி | gongura chicken curry  தேவையான பொருட்கள் : சிக்கன் - அரை கிலோ கோங்குரா  - 1 கட்டு பெரிய வெங்காயம் - 2 பச்சை மிளகாய் - 4 இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 ஸ்பூன் தக்காளி  -  2 மஞ்சள் தூள் - கால் ஸ்பூன் மிளகாய்த்தூள் -  1  ஸ்பூன் சீரகத்தூள் - 1 ஸ்பூன் மல்லித்தூள் - 2  ஸ்பூன் கரம் மசாலா - 1/2 ஸ்பூன் எண்ணெய் - தேவையான அளவு உப்பு - தேவையான அளவு செய்முறை : கீரையை  சுத்தம்  செய்து  நன்றாக மண் போக 3  தடவை தண்ணீரில் கழுவி எடுத்து வைத்து கொள்ளவும். 1  வெங்காயம், தக்காளி  ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். சிக்கனை நன்றாக கழுவி சுத்தம் செய்து வைக்கவும். கடாயில்    2 ஸ்பூன்  எண்ணெய் விட்டு, சூடானதும்  பச்சை மிளகாய், வெங்காயம்  தக்காளி  சேர்த்து வதக்கவும். அதில் சுத்தம் செய்த கீரை, சிறிது உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.  கீரை நல்ல புளிப்பாக இருக்கும். நன்றாக வதங்கியதும் அடுப்பில் இருந்து இறக்கி ஆற வைத்து மிக்சியில் அரைத்து கொள்ளவும்...

சிக்கன் வடை

Image
சிக்கன் வடை | chicken vadai தேவைாயன பொருளள்கள் . சிக்கன்   - கால் கிலோ முட்டை - 1 பச்சை மிளகாய் - 2 நறுக்கிய பெரிய வெங்காயம் - 4 இஞ்சி - பூண்டு  பேஸ்ட் - 3 ஸ்பூன் தேங்காய் துருவல்  - 1 மூடி மிளகாய் தூள் - 1 ஸ்பூன் மஞ்சள் தூள் - அரை ஸ்பூன் கறி மசாலா - 1 ஸ்பூன் நறுக்கிய  கொத்தமல்லி - சிறிதளவு எண்ணெய் - தேவைாயன அளவு உப்பு - தேவைாயன அளவு செய்முறை . சிக்கனை எலும்பில்லாமல்   சுத்தம் செய்து சின்ன துண்டுகளாக நறுக்கி  கொள்ளவும். மிக்ஸியில் சுத்தம் செய்த சிக்கன் துண்டுகளை போட்டு தண்ணீர் சேர்க்காமல் நன்கு நைசாக விழுதாக போல் அரைத்து  கொள்ளவும். தேங்காயை மிக்ஸியில் போட்டு தண்ணீர் சேர்த்து அரைத்து விழுதாக  கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் அரைத்த சிக...

மொஹல் சிக்கன் கிரேவி

Image
மொஹல் சிக்கன் கிரேவி    தேவைாயன பொருள்கள்    கொத்துகறி சிக்கன்  - அரைக் கிலோ நறுக்கிய  பச்சை மிளகாய் - 6 நறுக்கிய தக்காளி - 4 நறுக்கிய பெரிய வெங்காயம் - 2 மிளகாய்த் தூள் - 1 ஸ்பூன் கரம் மசாலாத் தூள் - 1 ஸ்பூன் பூண்டு - 10 பல் இஞ்சி -சிறிதளவு நெய் - 4 ஸ்பூன் உப்பு - தேவையான அளவு மல்லி இலை  - சிறிதளவு செய்முறை இஞ்சி, பூண்டினை தோல் நீக்கி பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கடாயில்  நெய் விட்டு நறுக்கிய இஞ்சி பூண்டினைப் போட்டு நன்கு வதக்கிக் கொள்ளவும். அத்துடன் கொத்துகறி சிக்கனை சேர்த்து, கரம் மசாலாத் தூள், மிளகாய்த் தூள், தேவையான அளவு உப்பு ஆகியவற்றைச் சேர்த்துப் பிரட்டிஅடுப்பை சிம்மில் வைத்து  நன்கு வேகவிடவும். கறி முக்கால் பகம்  வெந்தவுடன்   நறுக்கிய தக்காளியைச் சேர்த்து,  நெய் தனியாக  பிரிந்து வரம் வரை வதக்கவும். அதன் பிறகு பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கி, கறி நன்கு வெந்தவுடன் இறக்கவும். சுவையான மொஹல் சிக்கன் கிரேவி  ரெடி. கொத்தமல்...

கார சாரமான சிக்கன் வறுவல்

Image
கார சாரமான சிக்கன் வறுவல் தேவையான பொருள்கள். சிக்கன் - அரை  கிலோ மிளகு - 1 ஸ்பூன் மிளகுத் தூள் - 3  ஸ்பூன் பச்சை மிளகாய் - 3 காய்ந்த மிளகாய் - 2 நறுக்கிய வெங்காயம் - 1 அரைத்த வெங்காயம் - 1 இஞ்சி பூண்டு பேஸ்ட் - 3 ஸ்பூன் எண்ணெய் - 4 ஸ்பூன் கறிவேப்பிலை - சிறிதளவு உப்பு - தேவையான அளவு செய்முறை: முதலில் சிக்கனை நன்கு சுத்தமாக கழுவி தண்ணீரை வடித்து வைக்கவும்.  பின்னர் அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு,  அரைத்த வெங்காயம் , இஞ்சி பூண்டு பேஸ்ட், சிறிதளவு உப்பு மற்றம்  2  ஸ்பூன் மிளகுத் தூள் சேர்த்து  நன்கு  பிரட்டி  1   மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு  கடாயை  அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், மிளகு, காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும். பிறகு அதில் 1 ஸ்பூன்  மிளகுத்தூள் சேர்த்து, பின் அதில் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும். அதனுடன்   ஊற வைத்துள்ள சிக்கனை கடாயில் போட்டு  10 நிமிடம் நன்குவதக்கி சிறிதளவு...

டிராகன் சிக்கன் | Dragon chicken

Image
டிராகன் சிக்கன் | Dragon chicken     தேவையான பொருட்கள்: ஊற வைப்பதற்கு தேவையான பொருள்கள் . எலும்பில்லாத சிக்கன் - அரை கிலோ இஞ்சி - பூண்டு  பேஸ்ட்  - 2  ஸ்பூன் மிளகாய் தூள்  - 2 ஸ்பூன் கார்ன் ப்ளார் மாவு - 2  ஸ்பூன் மிளகுத் தூள் - 1  ஸ்பூன் மஞ்சள் தூள்  - கால் ஸ்பூன் உப்பு  - தேவையான அளவு வதக்க தேவையானவை பூண்டு பல்  - 10 நறுக்கியது தக்காளி சாஸ் - 4 ஸ்பூன் சோயா சாஸ் - 1  ஸ்பூன் கொத்தமல்லி -  சிறிதளவு நறுக்கிய வெங்காயம் - 1 நறுக்கிய குடை மிளகாய்  - 1 எண்ணெய் - பொரிப்பதற்கு  - தேவையான அளவு  செய்முறை: முதலில் சிக்கனை நன்கு சுத்தமாக கழுவி, அதில் ஊற வைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களைப் நன்கு மிக்ஸ் பண்ணி   15 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின்னர் அந்த சிக்கனை எண்ணெயில் போட்டு,  பொரித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு கடாயை  அடுப்பில் வைத்து, அதில் 2  ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில்  வெங்காயம் குடை மிளகாய்  பூண்ட...

நாட்டு கோழிச்சாறு

Image
நாட்டு கோழிச்சாறு தேவையான பொருள்கள் . நாட்டுக்கோழி சிக்கன் - அரைக் கிலோ சின்ன வெங்காயம் - 10 தக்காளி - 2 மஞ்சள் தூள் - அரை ஸ்பூன் மிளகு - 1 ஸ்பூன் சீரகம் - 2 ஸ்பூன் தனியா - 1 ஸ்பூன் வெந்தயம் - அரை ஸ்பூன் காய்ந்த மிளகாய் - 2 கடலைப்பருப்பு -1 ஸ்பூன் நல்லெண்ணெய் - 2 ஸ்பூன் மல்லி இலை - சிறிதளவு கறிவேப்பிலை - சிறிதளவு உப்பு - தேவையான அளவு செய்முறை   சிக்கனை சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும்). தக்காளியைப் பொடியாக நறுக்கி கொள்ளவும். பின் கடாயில் எண்ணெய் ஊற்றாமல் காய்ந்த மிளகாய், மிளகு, சீரகம், தனியா, வெந்தயம் மற்றும் கடலைப்பருப்பு போட்டு வறுத்து ஆற வைத்து பொடித்து கொள்ளவும்..  அத்துடன் வெங்காயம், பூண்டு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.  குக்கரில் எண்ணெய் ஊற்றி, சிக்கனை போட்டு வதக்கவும். சிக்கன் வதங்கியதும் தக்காளி, அரைத்த விழுது, உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து, 5 டம்ள...

கோங்கூரா சிக்கன் கறி

Image
கோங்கூரா சிக்கன் கறி தேவையான பொருட்கள் : சிக்கன் - அரை கிலோ கோங்குரா - 1 கட்டு பெரிய வெங்காயம் - 2 பச்சை மிளகாய் - 4 இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 ஸ்பூன் தக்காளி - 2 மஞ்சள் தூள் - கால் ஸ்பூன் மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன் சீரகத்தூள் - 1 ஸ்பூன் மல்லித்தூள் - 2 ஸ்பூன் கரம் மசாலா - 1/2 ஸ்பூன் எண்ணெய் - தேவையான அளவு உப்பு - தேவையான அளவு செய்முறை :  கீரையை சுத்தம் செய்து நன்றாக மண் போக 3 தடவை தண்ணீரில் கழுவி எடுத்து வைத்து கொள்ளவும். 1 வெங்காயம், தக்காளி ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். சிக்கனை நன்றாக கழுவி சுத்தம் செய்து வைக்கவும். கடாயில் 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு, சூடானதும் பச்சை மிளகாய், வெங்காயம் தக்காளி சேர்த்து வதக்கவும்.  அதில் சுத்தம் செய்த கீரை, சிறிது உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். கீரை நல்ல புளிப்பாக இருக்கும். நன்றாக வதங்கியதும் அடுப்பில் இருந்து இறக்கி ஆற வைத்து மிக்சியில் அரைத...

மொஹல் சிக்கன் கிரேவி

Image
மொஹல் சிக்கன் கிரேவி தேவைாயன பொருள்கள்  கொத்துகறி சிக்கன் - அரைக் கிலோ நறுக்கிய பச்சை மிளகாய் - 6 நறுக்கிய தக்காளி - 4 நறுக்கிய பெரிய வெங்காயம் - 2 மிளகாய்த் தூள் - 1 ஸ்பூன் கரம் மசாலாத் தூள் - 1 ஸ்பூன் பூண்டு - 10 பல் இஞ்சி -சிறிதளவு நெய் - 4 ஸ்பூன் உப்பு - தேவையான அளவு மல்லி இலை - சிறிதளவு   செய்முறை இஞ்சி, பூண்டினை தோல் நீக்கி பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கடாயில் நெய் விட்டு நறுக்கிய இஞ்சி பூண்டினைப் போட்டு நன்கு வதக்கிக் கொள்ளவும்.  அத்துடன் கொத்துகறி சிக்கனை சேர்த்து, கரம் மசாலாத் தூள், மிளகாய்த் தூள், தேவையான அளவு உப்பு ஆகியவற்றைச் சேர்த்துப் பிரட்டிஅடுப்பை சிம்மில் வைத்து நன்கு வேகவிடவும். கறி முக்கால் பகம் வெந்தவுடன் நறுக்கிய தக்காளியைச் சேர்த்து, நெய் தனியாக பிரிந்து வரம் வரை வதக்கவும்.  அதன் பிறகு பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கி, கறி நன்கு வெந்தவுடன் இறக்கவும். சுவ...

தஞ்சாவூர் கோழி ஆப்பம்

Image
தஞ்சாவூர் கோழி ஆப்பம்   என்னென்ன தேவை? மைதா - இரண்டு கப் முட்டை - இரண்டு தேங்காய் பால் - ஒரு டம்ளர் சோம்பு தூள் - ஒரு தேக்கரண்டி வெங்காயம் - இரண்டு பச்சை மிளகாய் - மூன்று உப்பு - ஒரு தேக்கரன்டி இட்லி சோடா - ஒரு பின்ச்   எப்படிச் செய்வது? முட்டையை நுரை பொங்க அடித்து வைக்க வேண்டும். உப்பு, பச்சை மிளகாய், வெங்காயம், சோம்பு, தண்ணீர் சேர்த்து அரைக்க வேண்டும். மைதா மாவில் அரைத்ததை வடிகட்டி ஊற்ற வேண்டும். பிறகு அடித்து வைத்துள்ள முட்டை, தேங்காய் பால், இட்லி சோடா சேர்த்து கலக்கவும். தோசை மாவு பதத்திற்கு, தேவைக்கு தண்ணீர் சேர்த்து கொள்ளலாம். இப்போது தோசைகளாக வார்க்கவும். இதற்கு தொட்டுக்கொள்ள கோழி குருமா நல்லா இருக்கும், வெஜ் குருமா, சர்க்கரை, மிளகாய் பொடியும் நல்ல இருக்கும்

நாட்டுகோழி சுக்கா

Image
நாட்டுகோழி சுக்கா தேவையான பொருட்கள் நாட்டு கோழி சிக்கன் – அரை கிலோ சின்ன வெங்காயம் – 30 இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன் மல்லித்தூள் – 3 ஸ்பூன் மிளகாய் தூள் – 1 ஸ்பூன் மிளகு - 1 ஸ்பூன் சீரகம் - 1 ஸ்பூன் கரம்மசாலா தூள் - 1 ஸ்பூன் மஞ்சள்தூள் – அரை ஸ்பூன் உப்பு - தேவைாயன அளவு அரைக்க தேங்காய் துருவியது – 5 ஸ்பூன் கசகசா – 1 ஸ்பூன்  முந்திரிபருப்பு – 5 தாளிக்க நல்லெண்ணெய் - 5 ஸ்பூன் பட்டை – 2 துண்டு கிராம்பு – 2 செய்முறை :  சிக்கனை எலும்பு நீக்கி சின்னதாக வெட்டிக் கொள்ளவும். பின்பு மிளகு ,சீரகத்தை மிக்சியில் போட்டு நன்கு பொடித்து வைத்து கொள்ளவும்  வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். அரைக்க கொடுத்தவற்றை பரபரப்பாக அரைத்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கிய‌ எண்ணெயில் பட்டை , கிராம்பு போட்டு தாளித்து நறுக்கிய வெங்காயம்,சேர்த்து நன்றாக வதக்கவும். நன்றாக வதக்கிய பின் இஞ்சி, பூண்ட...

ப்ரான் பாஸ்தா

Image
ப்ரான் பாஸ்தா என்னென்ன தேவை? பென்னே பாஸ்தா - ஒரு கப் இறால் - கால் கப் வெங்காயம் - 2 தக்காளி - 4 - 5 குடைமிளகாய் - ஒன்று சுக்கினி - ஒன்று பூண்டு - 4 பற்கள் பச்சை மிளகாய் - 2 சில்லி ஃப்ளேக்ஸ் - கால் தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி   எப்படிச் செய்வது? தேவையான பொருட்களைத் தயாராக எடுத்துக் கொள்ளவும். இறாலைச் சுத்தம் செய்து வைக்கவும். பூண்டு மற்றும் வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தக்காளியின் பின் பகுதியில் குறுக்கும், நெடுக்குமாக கத்தியால் கீறி வெந்நீரில் 5 நிமிடங்கள் போட்டு வைத்தால் தோல் உரிந்துவிடும். பிறகு தக்காளியை கூழாக அரைத்துக் கொள்ளவும். பாஸ்தாவை வேக வைத்து தண்ணீரை வடித்து வைத்துக் கொள்ளவும். பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி பூண்டு போட்டுத் தாளித்து, வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும். அத்துடன் தக்காளி விழுதைச் சேர்த்து நன்கு வதக்கவும். வதங்கியதும் நறுக்கிய குடைமிளகாய் மற்றும் சுக்கினி, இரண்டாகக் கீறிய பச்சை மிளகாய் ...

மட்டன் கீமா தோசை

Image
மட்டன் கீமா தோசை தேவையான பொருட்கள் :  மட்டன் கொத்துகறி - 150 கிராம் பச்சை மிளகாய் - 2 வெங்காயம் - 2 இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 ஸ்பூன் மஞ்சள் தூள் - அரை ஸ்பூன் மிளகாய் தூள் - 1 ஸ்பூன் மிளகு தூள் - 1 ஸ்பூன் கறிவேப்பிலை - சிறிது பட்டை - 1 கிராம்பு - 2 எண்ணெய் - தேவையான அளவு உப்பு - தேவையான அளவு செய்முறை: வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். மட்டன் கொத்துகறியை கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். கடாயை அடுப்பில் வைத்து, அதில் 3 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை மற்றும் கிராம்பு சேர்த்து தாளித்த பின் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு பேஸ்ட் கறிவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும்.  பின்பு கொத்துகறி மசாலா துாள்கள் மற்றும் உப்பு சேர்த்து கிளறி, அடுப்பை சிம்மில் வைத்து, சிறிதளவு தண்ணீர் சேர்த்து மட்டன் நன்கு வேகும் வரை பிரட்ட வேண்டும். மட்டன் வெந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி வைக்கவும். பின்பு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து க...

நண்டு கிரேவி

Image
நண்டு கிரேவி தேவையானவை நண்டு 5 தக்காளி 3 (பொடியாக நறுக்கியது) சீரகம் 1 ஸ்பூன் சோம்பு 1 ஸ்பூன் பூண்டு 10 பல் இஞ்சி சிறிதளவு பல்லாரி 2 (பொடியாக நறுக்கியது) மிளகு 1 ஸ்பூன் காய்ந்த மிளகாய் 5 மஞ்சள் தூள் சிறிதளவு செய்முறை முதலில் காய்ந்த மிளகாய், சீரகம், மிளகு, பெருஞ்சீரகம், இஞ்சி, பூண்டு ஆகியவற்றை நன்கு அரைத்து கொள்ள வேண்டும். வாணலியில் 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு கறிவேப்பிலை, வெங்காயம் பின்னர் தக்காளி, மஞ்சள் தூள் போட்டு வதக்கவும். இப்போது அரைத்த மிளகு - மிளகாய் கலவையை நன்றாக வதக்கி அரை டம்ளர் தண்ணீர் விட்டு கலக்கவும்.    இப்ப நண்டை கலவையில் போட்டு, நன்கு கொதி வரும் வரை காத்திருக்கவும். வந்தவுடன் உப்பு போட்டு, அடுப்பை மிதமாக எரிய விட்டு கிரேவி பக்குவம் வரை வரை கிண்டவும். வழக்கம்போல இறக்கும்போது மல்லிைய தூவினால், நல்ல கமகம மணத்துடன் நண்டு கிரேவி ரெடி.

கோப்தா ரைஸ்

Image
கோப்தா ரைஸ்    என்னென்ன தேவை?   மட்டன் கைமா - 1/4 கிலோ கடலை மாவு- 1/4 கப் (வறுத்தது) பச்சை மிளகாய்-2 கொத்தமல்லி-சிறிதளவு உப்பு-தேவைக்கு எண்ணெய் -பொரிக்க தகுந்த அளவு அரைத்தெடுக்க- வெங்காயம்-2 சீரகம்-1 ஸ்பூன் மிளகு -1 ஸ்பூன் ஏலக்காய்-4 கிராம்பு-5 பட்டை-1 இஞ்சி பூண்டு விழுது- 2 ஸ்பூன் மஞ்சள் தூள்- 1/4 ஸ்பூன் ப்ரைட்ரைஸ் செய்ய:- கறிவேப்பிலை-ஒரு கொத்து சாதம்-2 கப் வெங்காயம்-1 இஞ்சி-ஒருதுண்டு (துருவியது) பூடு-8 பல் (பொடியாய் நறுக்கியது) வெள்ளை மிளகு தூள்- அரைஸ்பூன் கேரட்-கால் (நீளவாக்கில் நறுக்கியது) கோஸ்-அரை கப் எப்படிச் செய்வது? கைமாவை மிக்ஸியில் மீண்டும் ஒரு முறை அடித்து உப்பு, அரைத்த விழுது, கடலை மாவு சேர்த்து கெட்டியாக பினைந்துக்கொள்ளவும். கடைசியில் கொத்தமல்லியும் பச்சை மிளகாயும் கலந்து பின் உருண்டைகளாக உருட்டி சிறுதீயில் பொரித்தெடுக்கவும். கோப்தா தயார். எண்ணெயில் கறிவேப்பிலை,வெங்காயம் தாளித்து பொன...

இறால் அவரை பொரியல்

Image
இறால் அவரை பொரியல்     என்னென்ன தேவை?   இறால் - 10 (பெரியது) அவரைக்காய் - 10 வெங்காயம் - ஒன்று மிளகாய்த் தூள் - அரை தேக்கரண்டி மிளகுத் தூள் - அரை தேக்கரண்டி சீரகத் தூள் - கால் தேக்கரண்டி மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி உப்பு - கால் தேக்கரண்டி    எப்படிச் செய்வது?   அவரைக்காயை மெல்லிய சிறு துண்டுகளாகவும், வெங்காயத்தைப் பொடியாகவும் நறுக்கிக் கொள்ளவும். இறாலைச் சுத்தம் செய்து கொள்ளவும். பெரிய இறாலாக இருப்பதால் இரண்டாக நறுக்கி வைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், இறாலைப் போட்டு சிறிது நேரம் வதக்கவும்.    இறாலுடன் மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், சீரகத் தூள், மிளகு தூள் மற்றும் உப்பு சேர்த்து பிரட்டவும்.    பிறகு கால் கப் தண்ணீர் ஊற்றிக் கிளறிவிட்டு, இறாலைச் சற்று நேரம் வேகவிடவும்.    தண்ணீர் வற்றி இறால் அரை வேக்காடு வெந்ததும், நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம் மற...

கோல்டன் ஃப்ரைடு பிரான் ஃபிங்கர்

Image
கோல்டன் ஃப்ரைடு பிரான் ஃபிங்கர் என்னென்ன தேவை? இறால் - 25 கிராம், இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன், வெள்ளை மிளகுத்தூள் - 2 கிராம், உப்பு - 3 கிராம், வினிகர் - 1 டேபிள்ஸ்பூன், சோயா சாஸ் - 1 டேபிள்ஸ்பூன், பிரெட் கிரம்ஸ் - 100 கிராம், மைதா - 100 கிராம், முட்டை - 1, பால் அல்லது தண்ணீர் - 1 டேபிள் ஸ்பூன், பொரிக்க எண்ணெய் - தேவைக்கு.  எப்படிச் செய்வது? இறாலை சுத்தம் செய்து டிஸ்யூ பேப்பரில் பரப்பி வைக்கவும். பாத்திரத்தில் இஞ்சி பூண்டு விழுது, வெள்ளை மிளகுத்தூள், உப்பு, வினிகர், சோயா சாஸ் சேர்த்து இறாலை கலந்து வைக்கவும்.  முட்டையை பால் அல்லது தண்ணீரில் நன்கு அடித்து கொள்ளவும். முதலில் இறாலை மைதா மாவில் பிரட்டி, முட்டைக் கலவையில் முக்கி எடுத்து, பிரெட் கிரம்ஸில் பிரட்டி, 30 நிமிடம் ஃப்ரிட்ஜில் வைக்கவும். கடாயில் எண்ணெயை காயவைத்து இறாலை பொன்னிறமாக பொரித்தெடுத்து பரிமாறவும்.

மஸ்டர்ட் இறால் மசாலா

Image
மஸ்டர்ட் இறால் மசாலா என்னென்ன தேவை? மிளகாய்த்தூள்- 1 டேபிள் ஸ்பூன், மஞ்சள் தூள் - 2 டேபிள்ஸ்பூன், கருஞ்சீரகம் - சிறிது, உப்பு - தேவைக்கு, சர்க்கரை - 1 டீஸ்பூன், தேங்காய் விழுது - 4 டேபிள்ஸ்பூன், அரைத்த கடுகு விழுது - 4 டேபிள்ஸ்பூன், தயிர் - 5 டேபிள்ஸ்பூன், இறால் - 350 கிராம், கடுகு எண்ணெய் - 6 டேபிள்ஸ்பூன். எப்படிச் செய்வது? இறாலை நன்கு சுத்தம் செய்து உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து 30 நிமிடம் தனியே வைக்கவும். பிறகு தயிர், மிளகாய்த்தூள், சர்க்கரை, தேங்காய் விழுது, கடுகு விழுது சேர்த்து நன்கு கிளறவும். கடாயில் கடுகு எண்ணெயை ஊற்றி கருஞ் சீரகம் போட்டு தாளித்து, இறால் மசாலாவை சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி வேகவிடவும். வெந்ததும் சாதத்துடன் பரிமாறவும்.

சிக்கன் மிளகு கறி

Image
சிக்கன் மிளகு கறி தேவையான பொருள்கள்  சிக்கன் - அரைக் கிலோ பெரிய வெங்காயம் - 2 தக்காளி - 2 பூண்டு - 5 பல் இஞ்சி - சிறிய துண்டு மிளகுத்தூள் - ஒரு ஸ்பூன் மல்லித்தூள் - 2 ஸ்பூன் மஞ்சள்தூள் - அரை ஸ்பூன் பட்டை - 1 கிராம்பு - 2 கறிவேப்பிலை - சிறிது எண்ணெய் - தேவையான அளவு உப்பு - தேவையான அளவு செய்முறை பெரிய வெங்காயம், தக்காளி இரண்டையும் பொடி பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பூண்டு, இஞ்சியை விழுதாய் அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்த பின்பு பட்டை, கிராம்பு தாளித்து நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு நன்றாக வதக்கவும்.  வெங்காயம் வதங்கியபின் இஞ்சி, பூண்டு விழுதினைப் போட்டு வதக்கி, பிறகு தக்காளியைப் போட்டு நன்றாக வதக்கி கழுவிய சிக்கனைப் போட்டு, மஞ்சள்தூள், மிளகுத்தூள், மல்லித்தூள், உப்பு சேர்த்து வதக்கவும். சிறிது கறிவேப்பிலையையும் உடன் சேர்த்துக் கொள்ளவும்.  கறி நன்கு வதங்கியபின் 1 டம்ளர் தண்ணீர் விட்டு மூடிவிடவும். நன்றாக கொதித்து குழம...

சில்லி சிக்கன்

Image
சில்லி சிக்கன் என்னென்ன தேவை? சிக்கன் - 1/4 கிலோ, குடைமிளகாய் - 1, பச்சைமிளகாய் - 2, பூண்டு - 2 பல், சின்ன வெங்காயம் - 10, சோயா சாஸ், சில்லி சாஸ், தக்காளி சாஸ் வகைகள் - தலா 1 டீஸ்பூன், வெண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவைக்கு, வெங்காயத்தாள் - சிறிது. எப்படிச் செய்வது? சிக்கனை வேகவைத்துக் கொள்ளவும். காய்கறிகளை நறுக்கிக் கொள்ளவும். கடாயில் வெண்ணெய் விட்டு நறுக்கிய பூண்டை சேர்த்து வதக்கி குடைமிளகாய், சின்ன வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.    பின்பு அனைத்து சாஸ் வகைகள், சிக்கன் துண்டுகள், உப்பு சேர்த்து கிளறி வெங்காயத்தாள் தூவி இறக்கவும்.

சிக்கன் வடை

Image
சிக்கன் வடை தேவைாயன பொருள்கள் .  சிக்கன் - கால் கிலோ முட்டை - 1 பச்சை மிளகாய் - 2 நறுக்கிய பெரிய வெங்காயம் - 4 இஞ்சி - பூண்டு பேஸ்ட் - 3 ஸ்பூன் தேங்காய் துருவல் - 1 மூடி மிளகாய் தூள் - 1 ஸ்பூன் மஞ்சள் தூள் - அரை ஸ்பூன் கறி மசாலா - 1 ஸ்பூன் நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு எண்ணெய் - தேவைாயன அளவு உப்பு - தேவைாயன அளவு செய்முறை.  சிக்கனை எலும்பில்லாமல் சுத்தம் செய்து சின்ன துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.  மிக்ஸியில் சுத்தம் செய்த சிக்கன் துண்டுகளை போட்டு தண்ணீர் சேர்க்காமல் நன்கு நைசாக விழுதாக போல் அரைத்து கொள்ளவும். தேங்காயை மிக்ஸியில் போட்டு தண்ணீர் சேர்த்து அரைத்து விழுதாக கொள்ளவும்.  ஒரு பாத்திரத்தில் அரைத்த சிக்கன் விழுதை போட்டு அதனுடன் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயத்தை சேர்த்து அதில் முட்டையை உடைத்து ஊற்றவும்.  பிறகு அதனுடன் இஞ்சி பூண்டு விழுது, கறி மசாலா, மஞ்சள் தூள் , மிளகாய் தூள், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் மற...

இறால் மிளகு வறுவல்

Image
இறால் மிளகு வறுவல் தேவையானவை இறால் மீன் 1/4 கிலோ பச்சை மிளகாய் 5 இஞ்சி 25 கிராம் பூண்டு 20 பற்கள் பல்லாரி 1 மிளகாய்த்தூள் 1 ஸ்பூன் மிளகுத்தூள் 1 ஸ்பூன் மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன் செய்முறை கழுவிய இறால் மீனுடன் மஞ்சள் தூள், மிளகுத்தூள், மிளகாய்த்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து ஊற வைக்கவும். பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டை விழுதுபோல அரைத்து தனியாக வைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பொடியாக நறுக்கிய பல்லாரி, கறிவேப்பிலையை போட்டு பொன்னிறமாக வதக்கவும்.       பின்னர் இஞ்சி, பூண்டு விழுதை சேர்த்து பச்சை மணம் மாறும் வகையில் நன்றாக வதக்கவும். இப்ப இறால் கலவையை வாணலியில் போட்டு நன்றாக பிரட்டவும். இதமான பதத்தில் இறால் வெந்ததும், அடுப்பை ஆஃப் செய்யவும்... அவ்வளவுதான்.. சுவையான இறால் மிளகு வறுவல் உங்கள் முன்னே...! இட்லி, தோசை, சாதம் உள்ளிட்டவைகளுடன் தொட்டு, பிரட்டி சாப்பிடலாம். டேஸ்ட் தெறிக்கும்...!

மொறு மொறு மிளகாய் சிக்கன்

Image
மொறு மொறு மிளகாய் சிக்கன்     தேவையான பொருள்கள்.:  சிக்கன் - 1 கிலோ மிளகாய் தூள் - 2 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி மிளகு தூள் - 1 தேக்கரண்டி கரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி பச்சை மிளகாய் - 2 காய்ந்த மிளகாய் - 4 எலுமிச்சை - அரை மூடி கலர்பொடி - 1/4 தேக்கரண்டி (விரும்பினால்) எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு கருவேப்பிலை - 2 ஆர்க்கு உப்பு - தேவைக்கேற்ப செய்முறை :                 காய்ந்த மிளகாயையும், பச்சை மிளகாயையும் மிக்சியில் தனித்தனியாக விழுதாக அரைத்துக் கொள்ளவும். சிக்கனில் கரம் மசாலா தவிர மற்ற அனைத்து பொடிகளையும், பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் விழுது, எலுமிச்சை சாறு சேர்த்து, தேவைக்கேற்ப உப்பு சேர்த்து கலந்து ஃபிரிட்ஜில் 1 மணி நேரம் வைக்கவும்.                 1 மணி...